ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு ஒப்புதல் கேட்கும் ஓயோ..
ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளை டிஜிட்டல் கட்டமைப்புக்குள் கொண்டுவந்ததில் ஓயோவின் பங்கு முக்கியமானதாகும். குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஓயோ நிறுவனம்அடுத்தடுத்து தனது வியாபாரத்தை விரிவுபடுத்த ஆரம்ப பங்கு வெளியீடு எனப்படும் ஐபிஓ வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்துக்கு தற்போது 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கடன் இருக்கிறது. அதனை சீரமைக்க அந்நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு கடன் தொகை சீரமைக்கப்பட்டால் சர்வதேச ரேட்டிங்கள் அளிக்கும் நிறுவனங்களான மூடிஸ், ஃபிட்ச் ஆகியவற்றின் பட்டியலில் இடம்பிடிக்கும். அண்மையில் ஓயோ நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் செபி அலுவலகத்துக்கு சென்று தங்கள் நிறுவன ஐபிஓவை துரிதப்படுத்த அழுத்தம் தந்துள்ளதாக கூறப்படுகிறது. ஓயோ நிறுவனத்தின் உரிமையாளரான ரித்திஷ் அகர்வால்,இது தொடர்பாக தனது பணியாளர்களிடம் இது தொடர்பாக பேசியும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 3 ஆவது காலாண்டில் லாபம் மட்டும் 30 கோடி ரூபாய் வந்திருப்பதாகவும் அவர் தனது பணியாளர்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். வரும் காலாண்டுகளில் அந்நிறுவன வருவாய் அதிகரிக்கும் என்றும் ரித்திஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் மட்டும் அந்நிறுவனம் 750 கோடி ரூபாய்க்கு ஹோட்டல் சேவைகளை வழங்கியிருக்கிறது. இந்த தொகை இந்தாண்டும் ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டார். ஓயோ நிறுவனத்தின் மொத்த ஹோட்டல்களின் எண்ணிக்கை 17 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. ஓயோ நிறுவனத்தின EBITDA எனப்படும் நிலைகளின் அளவும் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 100 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.