குழு அமைக்கும் மத்திய அரசு..
ஒரு நாளில் 9 போன்கள் இது வேணுமா,அதுவேணுமா என்று வந்தபடியே இருக்கிறது என்று மக்கள் புலம்பாமல் இல்லை. இந்த நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு புதிய திட்டங்களை கொண்டுவர பணிகள் நடந்து வருகிறது.
தொல்லை தரும் அழைப்புகள் தொடர்பாக வாட்ஸ்ஆப் மற்றும் பிற சேனல்களுக்கு மத்திய அரசு கெடுபிடி காட்ட இருக்கிறது.
இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் உரிமைகள் தொடர்பு செயலாளர் ரோஹித் குமார் சிங் தலைமையில் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அதில் தேவையில்லாத வர்த்தக ரீதியிலான அழைப்புகளை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக வாட்ஸ் ஆப் குழுக்களில் வாடிக்கையாளர்களை குழப்ப பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் அவற்றை தடுக்க குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான டிராய், மற்றும் தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவன அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டே பிளாக் செயின் நுட்பத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டது. பின்னர் வாட்ஸ் ஆப் செயலியில் தேவையில்லை எனில் வெளியேறும் வசதியும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.