இன்று பங்குச்சந்தைகள் சரிய காரணம் இதுதான்..
மார்ச் 13 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகள் 1 விழுக்காடு வரை சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்க பணவீக்க விகிதம் பார்க்கப்படுகிறது. மேலும் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவை ஜூன் மாதத்துக்கு அந்நாடு ஒத்தி வைத்திருக்கிறது. பிரதானமான 5 காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம். ஸ்மால் கேப் வகையில் இந்திய சந்தைகள் பபுள் நிலையை எட்டியுள்ளது ஒரு காரணமாக கூறப்படுகிறது. அடுத்து சந்தையை முன்னோக்கி எடுத்துச்செல்ல பெரிய காரணிகள் ஏதும் இல்லாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. எதிர்பார்த்ததை விடவும் பணவீக்கம் அதிகமாக அமெரிக்காவில் இருப்பதும் இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்தது. இந்தியாவில் சில்லறை பணவீக்கத்தில் பிப்ரவரி மாதத்தில் பெரிய முன்னேற்றம் இல்லாததும் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி ஜனவரியில் 5.1 ஆக இருந்த பணவீக்கம், பிப்ரவரியில் 5.09 ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நிதியாண்டு நிறைவடையும் மார்ச் மாதம் என்பதால் பங்குச்சந்தைகளில் பெரிய முன்னேற்றம் காண முடியாது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பெரிய நிறுவனங்கள் போதிய லாபத்தை பதிவு செய்ய மார்ச் மாதத்தில் பங்குகளை விற்கும் சூழல் உள்ளதாலும் பங்குச்சந்தைகள் சரியும் சூழல் காணப்படுகிறது