லேசான ஏற்றத்தில் முடிந்த சந்தைகள்.
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 22ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 191 புள்ளிகள் உயர்ந்து 72,831 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 84 புள்ளிகள் உயர்ந்து 22,096 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையில் UPL, Maruti Suzuki, Hero MotoCorp, Bajaj Auto Sun Pharma ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல்Wipro, Infosys, LTIMindtree, HCL Technologies, TCSஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய சரிவை சந்தித்தன. உலோகம், ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், சுகாதாரத்துறை பங்குகள் அரை முதல் ஒரு விழுக்காடு வரை உயர்ந்தன. Avenue Supermarts, Bajaj Auto, Bharti Airtel, Cigniti Technologies, Cummins India, eMudhra, Force Motors, HEG, Hercules Hoists, Indus Towers, Maruti Suzuki, Pidilite Industries, Reliance Infra, Sapphire Foods, Solar Industries, Star Cement, Sudarshan Chemicals, Torrent Power, Vadilal Industries, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை முன்தின விலையை விட சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது.. ஒரு கிராம் தங்கம் 6200 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 49ஆயிரத்து600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை,கிராமுக்கு2 ரூபாய் குறைந்து 79 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 2000ரூபாய் குறைந்து 79 ஆயிரத்து 500ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.