ஹோலியை கொண்டாடித் தீர்த்த இந்தியர்கள்..
வண்ணங்களின் திருவிழாவாக ஹோலி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகையை ஒட்டி கடைகள் அடைக்கப்பட்டதால் பலரும் ஆன்லைனில் வண்ணப் பொடிகளை வாங்கியது தெரியவந்துள்ளது. இதுவரை ஆன்லைனில் இவ்வளவு அதிகமாக விற்பனை நடந்தது இல்லை என்று பிளிங்கிட், செப்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் சிலாகித்து வருகின்றன. வெள்ளை நிற டீஷர்ட்கள், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் விளையாட்டுத்துப்பாக்கிகள், வண்ணப்பொடிகள் என பல பொருட்களையும் இந்தியார்கள் வாங்க தவரவில்லை. பிளிங்கிட் நிறுவனத்தின் சிஇஓவாக உள்ள அல்பிந்தர் திந்த்சா இந்த விற்பனை தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒருநிமிடத்தில் இத்தனை ஆர்டர்கள் இதற்கு முன்பு குவிந்ததே இல்லை என்று பதிவிட்டுள்ளார். சிறப்பு பண்டிகை நாட்களில் ஆன்லைனில் ஒரு நிமிடத்தில் அத்தனை ஆயிரம் பேர் ஆர்டர்களை அளிக்கும் போக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதேபோல் செப்டோ நிறுவனத்தின் சிஇஓவாக உள்ள ஆதித் பலிச்சாவும் இதே பாணியில் தகவலை பகிர்ந்துள்ளார். அதில் வெள்ளை நிற டிஷர்ட்கள் தங்கள் தளத்தில் அதிகம் பேர் வாங்கியுள்ளதாகவும். தினசரி பொருட்களை வாங்க செப்டோ உதவுவதை மக்கள் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். டி ஷர்ட்கள் மட்டும் வாங்கி ஹோலி கொண்டாடினால் எப்படி,அதை துவைக்க டிடர்ஜண்டையும் மக்கள் அதிகம் பேர் ஆன்லைனில் வாங்கி குவித்துள்ளனர். ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட்டை நிர்வகிக்கும் பானி ஒரு பதிவை செய்திருக்கிறார். அதில் நபர் ஒருவர் 5 ஆயிரத்து 202 ரூபாய்க்கு வண்ணப்பொடிகள், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் துப்பாக்கி மற்றும் பொருட்களை வாங்கியிருப்பதாக பதவிட்டுள்ளார். கடைகள் அடைக்கப்படும் போது இந்த ஆன்லைன் வணிக நிறுவனங்கள் விற்பனை கணிசமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.