போயிங் சிஇஓ பதவி விலக முடிவு..
பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கில் இருந்து தலைமை செயல் அதிகாரி டேவ் கல்ஹான் பதவி விலக இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தாண்டு இறுதி வரை அவர் அந்த பதவியில் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வணிக பிரிவின் தலைவர் உடனடியாக ஓய்வு பெற இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள தலைவர் மீண்டும் தேர்தலையும் விரும்பவில்லையாம். அண்மையில் விமானங்கள் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கழன்று விழுந்த சம்பவம் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போயிங்737 மேக்ஸ் ரக விமானங்களில் இந்த பிரச்சனை காணப்பட்டது. இந்த சூழலில் போயிங்கின் பாதுகாப்பு மற்றும் தரம் கேள்விக்குறியானது. இந்த சம்பவத்துக்கு பிறகு டேவ் பதவி விலக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு தலைமை பதவிக்கு வந்தவர் டேவ் கல்ஹான், அவருக்கு முன்னதாக டென்னிஸ் முய்லென்பர்க் என்பவர் அந்த பதவியில் இருந்தார். 5 மாதங்களில் அடுத்தடுத்த 2விமானங்கள் விபத்துக்குள்ளாகி 346 விமான பயணிகளும் பணியாளர்களும் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து டென்னிஸ் பதவி விலகினார். பாதுகாப்பை உறுதி செய்வேன் என்று உறுதியளித்து பதவியேற்ற டேவ், அதற்கான பணிகளை செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் போர்ட்லேண்ட் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதும் விமான கதவு கழன்று விழுந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் குறிப்பிட்ட விமானத்தின் நட், போல்ட்டுகளில் 4 காணாமல் போனது தெரியவந்தது. இந்த விமான பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.