“இந்தியாவில்தான் கம்மி விலையில் விமான டிக்கெட்”
தலைப்பில் இருப்பதைப்போல இப்படி நாங்கள் சொல்லவில்லை ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் தலைமை பதவியில் இரண்டு ஆண்டுகளாக இருக்கும் வினய் துபே குறிப்பிட்டுள்ளார். வரும் 28 ஆம் தேதி முதல் ஆகாசா ஏர் விமான நிறுவனம் பன்னாட்டு விமான சேவையை தொடங்க இருக்கிறது. முதல் பன்னாட்டு விமானம் மும்பையில் இருந்து தோஹா நோக்கி பறக்க இருக்கிறது. 2030ஆம் ஆண்டில் உலகின் டாப் 30 விமான நிறுவனங்களில் ஒன்றாக தங்கள் ஆகாசா விமான நிறுவனம் இருக்கும் என்று வினய் குறிப்பிட்டுள்ளார். வருங்காலத்தில் தங்கள் நிறுவனத்தை பொது நிறுவனமாக மாற்றவும் ஆகாஸா ஏர் விமான நிறுவனம் திட்டம் தீட்டி வருகிறது. இந்தியாவில் அனைத்து தரப்பு விமான நிறுவனங்களும் சிறப்பாக வளர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் வினய் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு விமான சேவையை தொடங்கிய ஆகாஸா ஏர் நிறுவனத்தில் தற்போது 24 விமானங்கள் உள்ளன. இந்திய சந்தை பங்களிப்பில் நான்கரை விழுக்காடை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. உலகிலேயே குறைவான விமான டிக்கெட் கொண்ட நாடாகவும்,வேகமான வளர்ச்சி கொன்ட நாடாகவும் இந்தியா திகழ்கிறது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். ஆகாஸா நிறுவனத்தில் விமானிகள் பற்றாக்குறை இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அரபு நாடுகளுக்குத்தான் பலரும் சுற்றுலா செல்ல விரும்புதாகவும் ஆகாஸா ஏர் விமான நிறுவனத்தின் வினய் துபே கூறுகிறார். சிறப்பான வாடிக்கையாளர் சேவையை வழங்குவதே தங்கள் இலக்கு என்றும் வினய் குறிப்பிட்டார். கிளியர் டிரிப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அய்யப்பன் ராஜகோபாலான் என்பவர் பேசும்போது விரைவில் விமான கட்டணம் உயர வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார். முன்கூட்டியே பலரும் விமான டிக்கெட்களை பதிவு செய்து பறக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.