வணிகத்தின் அன்றே பணம்,, பீட்டா வெர்ஷன் அறிமுகம்..
இந்தியாவில் பங்குச்சந்தைகளில் பணம் முதலீடு செய்து அதில் இருந்து பணம் எடுக்கும் நுட்பத்துக்கு தற்போதுள்ள அவகாசம் குறையும் வகையில் டி பிளஸ் 0 என்ற புதிய முறை இந்திய பங்குச்சந்தைகளில் அமலுக்கு வந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் பீட்டா வெர்ஷன் மூலம் பணத்தை செட்டில் செய்வது மிகவும் எளிதாக கால அவகாசம் குறைக்கப்பட்டு 0 நாட்களாக்கப்பட்டுள்ளது. எளிமையாக சொல்லவேண்டுமானால் என்று வர்த்தகம் செய்கிறீர்களோ அன்றே உங்கள் கைகளுக்கு பணத்தை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை இன்று வர்த்தகம் செய்தால் நாளை தான் பணம் வரும் என்ற டிபிளஸ் 1 முறை உள்ளது. அதற்கு மாற்றாக நேர கால அவகாசத்தை குறைப்பதற்காக டிபிளஸ் 0 என்ற முறை அமலாகியுள்ளது. முதல்கட்டமாக 25 பங்குகளுக்கு மட்டும் அன்றைய தினமே பணம் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நுட்பம் காலை 9.15 மணி முதல் பகல் 1.30 மணி வரை மட்டுமே இயங்கும்.
இந்த புதிய முறை மற்றும் தொழ்நுட்ப முறை மூலமாக ஒரே நாளில் பணம் கிடைப்பதால் வணிகத்துக்கு சிறப்பாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் வணிகத்தை முடித்தால் நிறுவனங்களுக்கான முதலீடும் வேகமாக முடிக்கப்படும் என்று நிபுணர்கள் தெரிவிவிக்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்த முறை சற்று சிக்கலாக்கியுள்ளது. 2002 ஆம் ஆண்டு வணிகம் நடந்த 3 ஆவது நாளில் பணம் அளிக்கும் முறை வந்தது. அடுத்த ஆண்டே டி பிளஸ் 2 முறை வந்தது. 2021-ல் இந்த முறை டிபிளஸ் 1ஆக்கப்பட்டது. இந்தாண்டு டிபிளஸ் 0 ஆ க விற்பனை செய்யப்படுகிறது. சீனா மட்டுமே இதுவரை டிபிளஸ் 0 முறையை பின்பற்றுகிறது. அமெரிக்காவலும் இன்னும் சில நாடுகளிலும் இன்னமும் டிபிளஸ் 1 மற்றும் 2 நாட்களில்தான் பணம் கைக்கு கிடைக்கும் நிலை உள்ளது.