இன்போசிஸ் பஞ்சாயத்து..
பெங்களூரை அடிப்படையாக கொண்டு இயங்கும் பிரபல டெக் நிறுவனமாக திகழ்கிறது இன்போசிஸ். இந்த நிறுவனத்திற்கு அண்மையில் வரியாக 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்த மத்திய அரசு நோட்டீஸ் அளித்து இருந்தது. இந்த நிலையில் குறிப்பிட்ட தொகைக்கு உரிய ஆவணங்களை தாங்கள் ஏற்கனவே சமர்ப்பித்து விட்டதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமனாரான நாராயணமூர்த்தி, மத்திய அரசுக்கு எதிரான பல கருத்துக்களை அவ்வப்போது பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அண்மையில் கூட சீனாவின் பொருளாதாரத்தை உயர்த்தி அவர் பேசியிருந்தார். இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் கணிசமான சரிவை சந்தித்தன. சேவை சார்ந்த வரி விதிப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குறிப்பாக ஜிஎஸ்டியில் முறைகேடு நடந்திருப்பதாக அண்மையில் சர்ச்சை எழுந்தது. இதனால் இன்போசிஸ் நிறுவன பங்குகள் கடந்த இரண்டு வாரங்கள் பெரிய சரிவை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு ஐந்து நிலைகளை கொண்டுள்ளது 0, ஐந்து 12, 18, 28 ஆகிய விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் மூன்று வகையான ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படும் நிலையில் இந்தியாவில் 5 வகையான ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது நிதித்துறை சார்ந்த நிபுணர்களையே குழப்பம் அடைய வைத்திருக்கிறது. இந்நிலையில் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகைகள் குறித்து இன்போசிஸ் விளக்கம் தற்போது அளித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் பெங்களூருவில் தலைமை அலுவலகம் வைத்திருந்தாலும் உலகின் பல நாடுகளிலும் கிளைகள் உள்ளன. சேவை ஏற்றுமதிக்கான ஜிஎஸ்டியை செலுத்தவில்லை என்பதே தற்போதைய புகாராக இருக்கிறது. மத்திய அரசின் ஜிஎஸ்டி பிரிவுக்கும் இன்போசிஸ் நிறுவனத்துக்கும் இடையிலான இந்த கருத்து மோதல் வணிக ரீதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.