உயர்ந்து முடிந்த சந்தைகள்
ஆகஸ்ட் 07 ஆம் தேதி புதன்கிழமை, இந்தியப்பங்குச் சந்தைகள் சரிவில் இருந்து மீண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 874 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து 468 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 305 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 297 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவுற்றது. Coal India, Adani Ports, Power Grid Corp, Cipla உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் கண்டன. IndusInd Bank, Eicher Motors, Britannia, Tech Mahindra, Titan Company ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. ஆகஸ்ட் 07 ஆம் தேதி புதன்கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து விற்பனையானது. ஒருசவரன் 50 ஆயிரத்து 640 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6,330 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி முன்தின விலையில் இருந்து 50 காசுகள் குறைந்து 87ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளியும் விலையும் கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 87 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்