வெளிப்புற நிதியை தேடும் அமரராஜா…
தெலங்கானாவை பூர்விகமாக கொண்டு இயங்கும் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் அமரராஜா. இந்த நிறுவனம் 9 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் தெலங்கானாவில் ஜிகா பேக்டரி ஒன்றை கட்டி வருகிறது. இதற்காக கடன்,ஈக்விட்டி, உள்ளிட்ட வகைகளில் நிதியை அந்நிறுவனம் திரட்டி வருகிறது. முதல்கட்டமாக 8-10 ஜிகாவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரிகளை அந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. அமர ராஜா நிறுவனத்தில் அதிநவீன செல் தொழில்நுட்பப் பிரிவில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி செல்கள், சார்ஜர்கள் தயாரிக்கப்பட உள்ளன. மகபூப் நகர் பகுயில் 1 முதல் 1.5 ஜியாவாட் ஹவர் பேட்டரி தயாரிக்கும் ஆலையை அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. வரும் 2029 ஆம் ஆண்டிற்குள் 16ஜிகாவாட் அளவுக்கு உற்பத்தியை அதிகரிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, 5 ஆண்டுகளில் இதன் தேவை மாறுபடும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது வரை மின்சார கார்களில் பேட்டரிகளுக்கான செலவு 40 %ஆக உள்ள நிலையில் தங்கள் நிறுவன பேட்டரிகள் பயன்பாட்டுக்கு வந்தால் 1 முதல் 2 விழுக்காடு செலவு மட்டுமே ஆகும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில் இந்த வணிகம் இருமடங்காகும் என்றும் அமரராஜா நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.