தனியார் நிறுவனத்தை வாங்குகிறதா எல்ஐசி?
பல ஆண்டுகள் காப்பீட்டுத்துறையில் அனுபவம் கொண்ட எல்ஐசி நிறுவனம் தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கால ஓட்டத்துக்கு தகுந்தபடி எல்ஐசி நிறுவனமும் மெல்ல மெல்ல டிஜிட்டலுக்கு மாறி முழுமதும் டிஜிட்டலாகிவிட்டது. தற்போது வரை 1 விழுக்காடு மட்டுமே முற்றிலும் டிஜிட்டலாக உள்ள எல்ஐசியில் படிப்படியாக வளர்ச்சி இருக்கும் என்று அதன் தலைமை செயல் அதிகாரி சித்தார்த்தா மொஹாந்தி தெரிவித்துள்ளார். 96 விழுக்காடு அளவுக்கு பாலிசிகள் ஏஜெண்ட்டுகள் மூலமாகவே வருகின்றன. டிஜிட்டலுக்கு மாறினாலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக மொஹாந்தி கூறியுள்ளார். தற்போது வரை 14 லட்சம் பேர் ஏஜெண்டுகளாக உள்ளனர். இந்தியாவில் காப்பீடு என்பது பெயர் அளவுக்கே சிலர் எடுப்பதாகவும், வரிச்சலுகைகளும் குறைவாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் படிப்படியாக பழைய வருமான வரிசெலுத்தும் முறை குறைக்கப்பட்டு வரும் நிலையில் வீட்டுக்கடனில் எந்த பெரிய பிரச்சனையும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். எல்ஐசி நிறுவனம் எந்த பெரிய திடீர் முடிவுகளையும் எடுக்காது என்றும் ,எல்ஐசியில் வலுவான ஆராய்ச்சி குழு இருப்பதாகவும் கூறியுள்ள அவர், எல்ஐசியில் முதலில் பாலிசி போட தயங்கியவர்கள் தற்போது 2 அல்லது 3 ஆண்டுகளில் தங்கள் முடிவு சரியானது என்று மாறியுள்ளதாக கூறியுள்ளார். தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தை வாங்க இருப்பதாக கூறியுள்ள அவர், அரசாங்கம்தான் இறுதி முடிவெடுக்கும் என்று கூறியுள்ளார். 2025-ஆம் நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை எல் ஐசி எட்டும் என்றும் மொஹாந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக கடுமையாக உழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.