ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவுகளை அசை போட்ட வாரன்..
உலகிலேயே மூத்த முதலீட்டாளர்களில் முக்கியமானவரான வாரன் பஃப்பெட் கடந்த 2012-ல் பேசிய நிகழ்வு தற்போது மீண்டும் வட்டமிட்டு வருகிறது. அதாவது ஒரு நாள் ஸ்டீவ் ஜாப்ஸ் தனக்கு தொலைபேசியில் அழைத்ததாகவும், அதிகரித்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் லாபத்தை என்ன செய்வது என்று கேட்டதாகவும் கடந்த 2012-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நேரலையில் நினைவுகூர்ந்தார். நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் பேசிக்கொண்டதாகவும், இத்தனை பணத்தையும் வைத்து என்ன செய்வது என ஸ்டீவ் ஜாப்ஸ் கேட்டுக்கொண்டார். அப்போது பங்குககளை திரும்பப்பெறுதல், டிவிடண்ட்ஸ், பிற நிறுவனங்களை வாங்குவது உள்ளிட்ட ஆலோசனைகளை வாரன் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் மிகவும் மதிப்பு குறைவாக இருப்பதாக ஸ்டீவ் ஜாப்ஸ் தம்மிடம் தெரிவித்ததாக வாரன் பஃபெட் அந்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இறுதியில் வாரன் பஃபெட்டின் ஆலோசனைகளை ஸ்டீவ் ஜாப்ஸ் கேட்கவில்லையாம். மார்ச் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் பண கையிருப்பு 67.150 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 20.19 விழுக்காடு அதிகமாகும். ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து 50 விழுக்காடு பங்குகளை வாரன் பஃபெட் விற்றுவிட்ட நிலையில், வாரனின் பழைய காணொலி தற்போது வேகமாக பரவி வருகிறது.