வாரன் நிறுவனத்தில் இவ்ளோ பணமா?
உலகளவில் மிக மூத்த முதலீட்டாளர்களில் முக்கியமானவர் வாரன் பஃப்பெட். இவரின் பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்திடம் தற்போது 277 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் கைவசம் இருக்கிறது. இந்த தொகையானது கடந்த 2005-ல் அவர் வைத்திருந்த மொத்த சொத்தில் 25 %ஆகும். இவர் அண்மையில்தான் ஆப்பிள் மற்றும் பேங்க் ஆப் அமெரிக்கா நிறுவன பங்குகளில் பெரும் பகுதியை விற்று பணமாக வைத்திருந்தார். அதிக ஈக்விட்டி பங்குகளை வாங்க தாம் ஆர்வம் காட்டவில்லை என்று அண்மையில் நடந்த பெர்க்ஷைர் ஆண்டு பொதுக்கூட்டத்தில் வாரன் பேசியிருந்தார். குறைந்த ரிஸ்க் இருக்கும்போதுதான்,அதிக பணம் கிடைக்கும் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார். பெர்க்ஷைர் நிறுவனத்தின் ஜூன் வரையிலான காலாண்டில் அழகு சாதன பொருட்களான அல்டா பியூட்டி, மற்றும் விண்வெளி நிறுவனமான ஹெய்கோவில் சிறிய அளவில் முதலீடுகள் இருப்பது உறுதியானது. அமெரிக்காவே பொருளாதார மந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நேரத்தில் வாரனின் நிறுவனத்தில் அதிக பணம் கையிருப்பில் உள்ளது. வரும் நாட்களில் அமெரிக்காவில் பெரிய அளவு வரி விதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் வாரன் பஃப்பெட் கடந்த மே மாதத்தில் நடந்த ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசினார். அமெரிக்க பங்குச்சந்தையில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு மத்தியில் பெரிய போட்டி நிலவுவதாகவும் வாரன் குறிப்பிட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.