ரோபோவுக்கு நடை பயில ஒருநாளைக்கு 28,000ரூபாய்..
உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமாக டெஸ்லா நிறுவனம் திகழ்கிறது. இதன் உரிமையாளர் எலான் மஸ்க், அவ்வப்போது தடாலடி முடிவுகளை எடுப்பதில் வல்லவராவார். மஸ்க் ஒரு வித்தியாசமான அறிவிப்பையும் அண்மையில் வெளியிட்டது. அதில் ரோபோவுக்கு நடக்க கற்றுத்தரும் பயிற்சியில்,ஒரு நாளைக்கு 28 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்று கூறியுள்ளார். அதாவது ஒரு மணி நேரத்துக்கு 4 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அமெரிக்காவில் பெரிய நிறுவனமான டெஸ்லாவின் ஆப்டிமஸ் என்ற ரோபோவை மஸ்கின் நிறுவனம் உருவாக்கியுள்ளது. அதற்கு மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை வைத்து நடக்க கற்றுத் தருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்டிமஸ் , தற்போது மேம்பட்ட வெர்ஷனுக்கு தயாராகி வருகிறது. இந்த பணிக்கு டேட்டா கலெக்சன் ஆப்ரேட்டர் என்ற புதிய பணியை மஸ்க் உருவாக்கியுள்ளார். ஆப்டிமஸுடன் நடந்து, அது சேகரிக்கும் தரவுகளை அறிக்கையாக அளிக்க வேண்டுமாம்.
உடல் தகுதியாக 5.7 அடி முதல் 5.11 அங்குல அளவுக்கு உயரமும், 30 பவுண்டு எடையை தூக்கிச்செல்லும் உடல் தகுதியும் இருக்க வேண்டும். இந்த பணியில் சேர்பவர்களுக்கு டெஸ்லா நிறுவனத்தின் அனைத்து சலுகைகளும் கிடைக்க உள்ளது. வெவ்வேறு ஷிஃப்டுகளிலும் இந்த பணிகள் நடைபெற உள்ளன. காலை 8 மணிக்கு சென்று மாலை 4.30 மணிக்கு வரும் ஒருஷிப்டும்,மாலை 4 மணிக்கு சென்று நள்ளிரவு 12.30 மணிவரை ஒன்றும், நள்ளிரவு 12 மணிக்கு சென்று காலை 8.30 மணி வரை மற்றொரு ஷிப்ட்டும் இருக்கிறது என டெஸ்லா தனது பக்கத்தில் கூறியுள்ளது. இந்த வேலை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள பாலோ அல்டோவில் மட்டுமே செய்ய முடியும்.