இன்போசிஸ் சர்ச்சை செப்.9-ல் முடிவு..
இன்போசிஸ் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 32 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது தகவல் தொழில்நுட்ப உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த வரிவிதிப்பு சரியில்லை என்றும் ஒரு புகார் எழுந்தது. இந்நிலையில் இது பற்றி ஒரு குழப்பம் தொடர்ந்து வரும் நிலையில் இது பற்றி அடுத்தகட்ட முடிவு எடுப்பதற்காக வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் இன்போசிஸ் விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்போசிஸ் பிரச்சனை மட்டுமின்றி, எத்திஹாட் உள்ளிட்ட 10 விமான நிறுவனங்கள் சார்ந்த பிரச்சனைகளையும் சரி செய்ய முயற்சி நடைபெறுகிறது. இன்போசிஸ் மீது விதிக்கப்பட்டுள்ள வரி என்பது வரி பயங்கரவாதம் என்று அந்நிறுவன முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பாய் தெரிவித்துள்ளார். தேவையற்ற வரி விதிப்பு முறைகளால் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையில் தொழில் தொடங்கும் வாய்ப்புகள் மோசமான பிம்பத்தை உருவாக்கக் கூடாது என்று இந்திய சாப்ட்வேர் மற்றும் சேவை நிறுவன சங்கம் கூறியுள்ளது. வரிகள் தொடர்பாக நிறுவனங்களிடம் விளக்கம் பெற மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.