ஐபிஓ அளவை குறைத்த பஜாஜ் நிறுவனம்..
பஜாஜ் ஹவுசிங் நிறுவனம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்க ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தனது மதிப்பை பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் குறைத்துள்ளது. அதாவது 6560 கோடி ரூபாயாக குறைத்துள்ளது. ஒரு பங்கு 66 முதல் 70 ரூபாயாக பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது. புனேவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு பஜாஜ் குழுமம் வெளியிடும் ஆரம்ப பங்கு வெளியீடு இதுவாகுமம். 1926 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பஜாஜ் நிறுவனத்தில் நிதி பிரிவு 2008 ஆம் ஆண்டு பொது நிறுவனமாக பட்டியலிடப்பட்டது.
1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பஜாஜ் ஆட்டோ நிறுவனம், உலகின் லாபகரமான இருசக்கர நிறுவனமாக உருவெடுத்துள்ளது. செபியிடும் பதிவு செய்துள்ள பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனமும் இந்த பங்குகளை புரமோட்டர் என்ற அடிப்படையில் விற்க உள்ளது. 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்த விற்பனை நடக்க இருக்கிறது. 6 ஆம் தேதி தொடங்கும் ஏலம் 11 ஆம் தேதி வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களுக்காக 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவன ஊழியர்களுக்கு 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் ஒதுக்கி தனியாக வைக்கப்பட்டுள்ளன.