நினைவுகளை அசைபோட்டார் சந்திரசேகரன்..
டாடா குழுமத்தின் தலைவரான சந்திரசேகரன்நடராஜன், அண்மையில் பேட்டி ஒன்றில் மின்சார கார்களை எப்படி டாடா மோட்டார்ஸ் தயாரித்தது என்று நினைவுகூர்ந்துள்ளார். இந்திய ஆட்டோமொபைல் சந்தை பெரிய சரிவை சந்தித்த காலகட்டம் அது. டாடா மோட்டார்ஸின் முன்னாள் நிர்வாக இயக்குநர் குவென்டரை அழைத்து மின்சார காரை டாடா தயாரிக்க வேண்டும் என்றதாகவும். அதற்கு குவெண்டர், 4 ஆண்டுகள் ஆகும் என்றார். ஆனால் தமக்கு ஓராண்டில் மின்சார கார் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் அதட்டியுள்ளார். ஆனால் அந்த சவாலைத்தான் ஏற்கவேண்டும் என்றும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 50 பேர் கொண்ட ஒன் டாடா என்ற முயற்சியோடு, டிசிஎஸ், டாடா பவர் மற்றும் எல் எக்ஸ்எஸ்ஐ , டாடா டெக்னாலஜீஸ், டாடா மோட்டார்ஸ் என அனைத்து பிரிவினரும் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலில் மகிந்திரா நிறுவனம் ஏற்கனவே அட்டகாசமான மின்சார கார்களை தயாரித்திருந்த காலகட்டம் அது. இரவு பகலாக உழைத்து டாடா மோட்டர்ஸ் நிறுவனம் நெக்சான் இ.வி. காரை தயாரித்துள்ளனர். உலகளவில் காற்று மாசடைந்த 20 நகரங்களில் இந்தியாவில் 14 நகரங்கள் இருப்பதால் முதலில் மின்சார கார்கள்தான் தேவை என்றும் சந்திரசேகரன் தெரிவித்தார். நிலக்கரிக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் தான் முதலீடுகளை செய்ய வேண்டும் என்று அந்த தருணத்தில்தான் முடிவெடுத்ததாக சந்திரசேதரன் தனது நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.