22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

லேசான சரிவுடன் முடிந்த இந்திய சந்தைகள்

செப்டம்பர் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72 புள்ளிகள் சரிந்து 82,890 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி32 புள்ளிகள் சரிந்து 25,356புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. Wipro, Bajaj Finance, Bajaj Finserv, Axis Bank,IndusInd Bank நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன, ITC, Adani Ports, HDFC Life, Coal India, SBI Life. ஆகிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. எப்எம்சி,ஆற்றல், எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவு பங்குகளைத் தவிர மற்ற அனைத்து துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், ஊடகம், உலோககம், ரியல் எஸ்டேட் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 0.5 முதல் 1.7 விழுக்காடு வரை உயர்வை கண்டன. செப்டம்பர்13ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்து600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் 120 ரூபாய் உயர்ந்த தங்கம் 6 ஆயிரத்து 6825 ரூபாயாக விற்கப்பட்டது. வெள்ளி விலைகிராமுக்கு 3 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 95 ரூபாயாக விற்கப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோ 3 ஆயிரத்து 500 ரூபாய் அதிகரித்து 95 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *