ஆர்வம் காட்டும் FMCG நிறுவனங்கள்
இந்தியாவில் FMCG நிறுவனங்கள் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்து வருகிறது. இந்த துறையின் வளர்ச்சி 14.9%ஆக இருக்கும் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2025 ஆம் ஆண்டு 220 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த துறை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு இந்த வணிகம் வெறும் 167 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
இமாமி, மாரிகோ, ஹிந்துஸ்தான் யுனிலிவர் ஆகிய நிறுவனங்கள் புதிய நிறுவனங்களை வாங்குவதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கனவே மக்களுக்கு நன்கு அறிமுகமான இந்த நிறுவனங்கள், புதுப்புது தயாரிப்புகளை சந்தைபடுத்த தீவிரம் காட்டுகின்றன. கொல்கத்தாவைச் சேர்ந்த இமாமி நிறுவனம் ஹெலியோஸ் லைஃப்ஸ்டைல் நிறுவனத்தை கடந்த ஆகஸ்ட்டில் 100% வாங்கிவிட்டது. இதேபோல் சிங்க்ஸ் சீக்ரட், ஆர்கானிக் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மூலகை தேநீர் மற்றும் ஆரோக்கியமான உணவுப்பொருட்களை விற்று வரும் நிலையில் இந்த நிறுவனத்தையும் டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டது. இதேபோல் 3,900 கோடி ரூபாயை முதலீடு செய்ய ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனமும் திட்டமிட்டுள்ளது. மின்வணிக நிறுவனங்கள் கொரோனாவுக்கு முன்பு 4-5%வளர்ச்சியைடந்த நிலையில் தற்போது இந்த வளர்ச்சி 10 முதல் 12 % ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பொதுமக்கள் செலவு செய்யும் விகிதம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்வதாக கூறியுள்ள டீம்லீஸ் என்ற நிறுவனம், இந்தியர்கள் செலவு செய்யும் தொகை 6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என்றும் கணித்துள்ளது.