கண்காணிக்க ஆணையிட்ட ரிசர்வ் வங்கி..
நிதிநுட்ப நிறுவனங்கள் மற்றும் அதுசார்ந்தவையுடன் தங்க நகை வழங்கும் நிறுவனங்கள் கைகோர்த்துள்ள நிலையில் கடன்களை கண்காணிக்க ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. வாடிக்கையாளர் இல்லாமலேயே தங்கத்தை மதிப்பிடுவது.,கடன் அளிப்பது உள்ளிட்டவற்றை முறையாக பதிவு செய்யவும், கணக்கு வழக்குகளை சரியாக பார்க்கவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 2025 நிதியாண்டின் இறுதியில் நகைக்கடன்கள் அளவு 10லட்சம் கோடி ரூபாய் என்ற மைல்கல்லை எட்டும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதுவே வரும் 2027-ல் 15லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்கிறது ICRA அமைப்பு. தங்க நகைக்கடன் வழங்கும் ஒவ்வொரு நிறுவனமும் ஆவணங்களை சரியாக வைக்கவும், அவுட்சோர்சிங் செய்யும் இடங்களில் கவனமாக இருக்கவும் ரசிர்வ் வங்கி மீண்டும் எச்சரித்துள்ளது. தங்கள் செயல்பாடுகள் குறித்து 3 மாதங்களுக்குள் இந்த நிறுவனங்கள் ரிசர்வ் வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நிறுவனங்களில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் ரிசர்வ் வங்கி கண்டிக்கத் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர் கண்முன்னே நகைகளை எடைபோடாமல் இருப்பது, நகைக்கு மதிப்பீடுகளை செய்வதில் குளறுபடி உள்ளிட்ட குறைகள் வந்ததை அடுத்தே ரிசர்வ் வங்கி தனது சாட்டையை சுழற்றியுள்ளது.