ஸ்விகி அப்டேட்..
பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் உணவு டெலிவரி நிறுவனம் ஸ்விகி, இந்த நிறுவனம் அண்மையில் 271 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை பணியாளர்களுக்காக ஒதுக்கியுள்ளது. ஸ்விகி நிறுவனம் ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. ஸ்விகியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீஹர்ஷா மெஜிடியின் வசம் 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகள் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அவர் வசம் நிறுவனத்தின் 6.23%பங்குகள் உள்ள நிலையில் கூடுதலாக ஒதுக்கப்பட்ட பங்குகளையும் சேர்த்தால் 2.2 முதல் 2.5% வரை கூடுதல் பங்குகளை மெஜடி வைத்திருப்பார். கடந்த ஜூலை மற்றும் செப்டம்பரில் தங்கள் வசம் இருந்த 23 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளை மெஜடியும், ஸ்விகியின் இணை நிறுவனரான நந்தன் ரெட்டி 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகளையும் விற்றுள்ளனர். இவர்கள் இருவர் மட்டுமின்றி பல்வேறு முக்கிய பதவிகளில் இருக்கும் மூத்த பணியாளர்களும் தங்கள் வசம் இருக்கும் பங்குகளை விற்றுள்ளதால் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர். குறிப்பாக அஷ்வத் சாமிநாதன் என்பவர் கடந்த செப்டம்பரில் மார்கெட்டிங் ஆபிசர் என்ற பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். 1.25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடுகள் குவியும் என்று ஸ்விகி நம்பிக்கையுடன் ஐபிஓவை எதிர்கொள்கிறது. Prosus, Norwest Venture Partners, Elevation Capital, Accel, Coatue, Alpha Wave Global உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்விகியில் முதலீடு செய்யும் என்றும், ஏற்கனவே உள்ள பங்குகளை விற்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.