கையை மீறி சென்ற இந்தியாவின் பணவீக்கம்..
இந்தியாவின் செப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 5.49%ஆக உயர்ந்து 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
காய்கனிகள் விலை உயர்வு இதற்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி தனது பணவீக்க வரம்பாக 4% அளவை வைத்துள்ள நிலையில் கடந்த ஜூலைக்கு பிறகு முதல் முறையாக ரிசர்வ் வங்கியின் மதிப்பை விட அதிகமாகியுள்ளது. 2விழுக்காடு முதல் 6% என்ற அளவில் பணவீக்கம் இருந்தால் சமாளிக்க இயலும் என்று கூறும் ரிசர்வ் வங்கி, கடந்த ஆகஸ்ட்டில் கிராமபுற விலைவாசி ஏற்றம் 4.16%ஆக இருந்த நிலையில் தற்போது இது 5.87% ஆகியுள்ளது. நகர்புற பணவீக்கம் ஆகஸ்ட்டில்3.14 விழுக்காடாக இருந்த நிலையில் தற்போது இது 5.05% ஆக உயர்ந்துள்ளது. காய்கறி விலை மட்டும் ஆகஸ்ட்டுக்கு பிறகு 35.99% உயர்ந்துள்ளது. பருப்பு மற்றும் அது சார்ந்த பொருட்கள் விலையும் 9.81%அதிகரித்துள்ளது. வெங்காயம் மற்றும் தக்காளி விலைகள் உயர்வும் அதில் குறிப்படத்தக்கது. மேலும் சர்வதேச அளவில் நடக்கும் பிரச்சனைகளால் சமையல் எண்ணெய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஹவுசிங் சார்ந்த பணவீக்கம் 2.78% ஆகவும், உடைகள் மற்றும் காலணிகள் குறித்த பணவீக்கம் 2.71% ஆக செப்டம்பரில் தொடர்கிறது. சிறப்பான பருவமழை காரணமாக உணவு உற்பத்தி அதிகரித்து விலைவாசி உயர்வு குறையும் என்று எதிர்பார்ப்பதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதே ரிசர்வ் வங்கிக்கு எழுந்துள்ள பெரிய சவாலாக மாறியுள்ளது.