ஹியூண்டாய் ஐபிஓ 3 ஆவது நாள்..
இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவை வெளியிட்ட ஹியூண்டாய்க்கு முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர். கடந்த 3 நாட்களாக நடந்து வந்த இந்த ஆரம்ப பங்கு வெளியீட்டின் மூலம் 27,870 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டது. பங்குச்சந்தைக்கு வருவதற்கு முன்பு நடந்த ஏலத்தில் ஹியூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஆரம்ப பங்கை 2.37 மடங்கு அதிகமாக மக்கள் வாங்கியுள்ளனர். இது அக்டோபர் 17 அன்று மாலை 5.30 மணி நிலவரம்தான். தகுதியான நிறுவன பயர்கள் எனப்படும் கியூஐபி நிறுவனங்கள், ஹியூண்டாயின் பங்குகளை 6.97 மடங்கு அதிகம் வாங்கியுள்ளனர். 14.2 கோடி பங்குகளை விற்று அதனை முதலீடாக ஹியூண்டாய் நிறுவனம் மாற்றியுள்ளது. ஐபிஓ வெளியானதும் ஹியூண்டாயின் ஜிஎம்பி தொகை வெறும் 8 ரூபாயாக சரிந்தது. இது 0.41 விழுக்காடு பட்டியலிடப்பட்ட ஆதாயம் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவாக இதற்கு முன்பு எல்ஐசியின் 21,000 கோடி ரூபாய் இருந்தது.இந்த சாதனையை ஹியூண்டாய் நிறுவனம் உடைத்துள்ளது.