ஹல்திராம்சில் முதலீடு செய்ய போட்டி..
பிரபல ஸ்னாக்ஸ் நிறுவனமான ஹல்திராம்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. 87 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்னாக்ஸ் உற்பத்தியாளராக உள்ளது. இந்த நிறுவனத்தின் 51 விழுக்காடு பங்குகள் விற்கப்போவதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து முதலீட்டாளர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். ஆனால் தற்போது 10 முதல் 15 விழுக்காடு பங்குகளை மட்டுமே அந்நிறுவனம் விற்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெமாசெக் ஹோல்டிங்ஸ்உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வந்தன. ஹல்திராம் நிறுவனத்தின் மதிப்பு 11 பில்லியன் அமெரிக்கடாலர்களாக உள்ளது. டெமாசெக் பைன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது 70 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை கூட டீல் சென்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிளாக்ஸ்டோன் நிறுவனமும் அபுதாபியின் முதலீட்டு நிறுவனமான அடியாவும் இணைந்து 76விழுக்காடு பங்குகளை வாங்க முயற்சி நடந்ததாகவும் கூறப்பட்டது. 500 வகையான உணவுப்பொருட்களை தயாரிக்கும் ஹல்திராம் நிறுவனம், 100 நாடுகளில் தனது கிளைகளை வைத்திருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பானில் இதன் கிளைகளும் பிரபலமானவை. பிரிட்டானியா, அமுல் நிறுவனங்களுக்கு போட்டியாக பல முன்னெடுப்புகளையும் அந்நிறுவனம் செய்து வருகிறது. டெல்லி மற்றும் நாக்பூரில் உள்ள இரண்டு ஹல்திராம் நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்தாண்டு இறுதியிலேயே இந்திய போட்டி ஆணையம் ஒப்புதலும் அளித்துள்ளது. கடந்த 2016-17, 2018-19 ஆகிய காலகட்டங்களில் முன்னணி நிறுவனங்களுடன் அந்நிறுவனம் பேசி வருகிறது. ஹல்திராம் நிறுவனத்தின் முதலாளிகளின் அடுத்த தலைமுறையினர் வணிகத்தில் அத்தனை ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. 2025 -ல் இந்திய ஸ்னாக் சந்தை மதிப்பு 1லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தின்பண்டங்களின் விற்பனை அமோகமாக நடந்து வருவது குறிப்பிடதக்கது.