தங்கம் கையிருப்பு அதிகரிப்பு..
ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்ததாஸ் பதவியேற்ற பிறகு இந்தியாவின் மொத்த வெளிநாட்டு தங்க சேமிப்பு 211 விழுக்காடு அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்தி காந்ததாஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டார்.
கடந்த 4 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் தங்க சேமிப்பு மதிப்பு 65.756 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதகு. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த மதிப்பு வெறும் 21.150 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. சக்தி காந்ததாஸ் பதவியேற்ற பிறகு 78.1 விழுக்காடு அளவுக்கு இந்தியாவின் வெளிநாட்டு பண கையிருப்பு அதிகரித்துள்ளது. வெளிநாட்டு பண கையிருப்பு என்பது டிசம்பர் 2018 சமயத்தில் வெறும் 393.735 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது தற்போது 701.176பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு பண கையிருப்பு என்பது வெளிநாட்டு ரொக்கப்பணம் , தங்கம் மற்றும் அரசின் சொத்துகள். உலகளவில் நிலவி வரும் சமமற்ற பொருளாதார சூழலால் பல நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். இந்தியாவும் தனது மொத்த கையிருப்பு கடன்களை 822 டன்னாக உயர்த்தியுள்ளது. கடந்த மே மாதம் 31 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவுக்கு சொந்தமான தங்கம், பிரிட்டனில் இருந்து 100 டன் அளவுக்கு பாதுகாப்பாக எடுத்துவரப்பட்டது. அடுத்து வரும் ஆண்டுகளிலும் அதே அளவு தங்கம் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.