தீபாவளி சிறப்பு வணிகம் நேரம் வெளியீடு..
தீபாவளி பண்டிகையை ஒட்டி, இந்திய பங்குச்சந்தைகளான தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தையில் சிறப்பு முகூர்த்த வர்த்தகம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் ஒன்றாம் தேதி மாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை சிறப்பு வர்த்தகம் நடத்தப்பட இருக்கிறது. இந்த சிறப்பு ஒரு மணி நேர வணிகத்தினை ஒட்டி, தேசிய பங்குச்சந்தையில் மாலை 5.45 மணிக்கே முன் நேர வர்த்தகம் நடத்தப்பட உள்ளது. விளக்கு ஒளியில், வண்ணக் கோலங்களுக்கு மத்தியில் சிறப்பு வர்த்தகம் நடத்துவது நல்ல தொடக்கமாக நம்பப்படுகிறது. எப்போதெல்லாம் சிறப்பு வர்த்தகம் நடக்கிறதோ அப்போதெல்லாம் ஈக்விட்டி சந்தையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. கடந்த 2008-ல் நடந்த சிறப்பு வர்த்தகத்தில் ஒரு மணிநேரத்தில் 9008 புள்ளிகள் பங்குச்சந்தைகள் உயர்ந்தன. கடந்த 2012 முதல் 12-ல் 9 நாட்கள் மிகப்பெரிய ஏற்றத்துடன் பங்குச்சந்தைகள் சிறப்பு வர்த்தகத்தை செய்துள்ளன. முகூர்த்த வணிகம் என்பது இந்திய பங்குச்சந்தைகளில் புத்தாண்டு போன்றது. குறிப்பிட்ட இந்த நாளில் பங்குகளை வாங்கினால் தொடர்ந்து முன்னேற்றம் இருக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். குறிப்பிட்ட இந்த நாளில் புதிய செட்டில்மன்ட் கணக்கு தொடங்குவதும் லாபமாக நம்பப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் நம்பிக்கையை அதிகரித்து அடுத்து வரும் ஓராண்டை வளமானதாக மாற்றும் என்று நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.