11 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..
இந்தியாவில் நுகர்வோர் நலன் விரும்பும் அமைப்பாக சிசிபிஏ என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு அண்மையில் பிரபல துரித வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. இந்த நோட்டீஸ் செப்டோ, பிளிங்கிட் உள்ளிட்ட மொத்தம் 11 நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. லீகல் மெட்ராலஜி சட்டம் என்ற சட்டத்தில் உள்ள அம்சங்களை 11 நிறுவனங்களும் மீறியுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்த தேதி சில இடங்களில் குறிப்பிடப்படாமல் உள்ளது. சில பொருட்களில் காலாவதி தேதி குறிப்பிவிடவில்லை என்றும். பேக்கேஜிங் மற்றும் விற்பனை விதிகளை மீறி செயல்படுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்விக்கி, இன்ஸ்டாமார்ட், மீஷோ,ஸ்னாப்டீலிலும் இந்த பிரச்சனைகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி கருத்து தெரிவிக்க அந்த நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. கடந்த 12 மாதங்களாக வந்த புகார்களை தொடர்ந்து நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் கடந்த 8 ஆம் தேதி ஆய்வு நடத்தியது. இந்த திடீர் ஆய்வைத் தொடர்ந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை நடத்தியதில் 57%பொருட்களில் அடிப்படையான தேதிகள் கூட அச்சிடப்படவில்லையாம். இதே அளவு கடந்தாண்டு 50% ஆக இருந்தது.