ரிசர்வ் வங்கியின் புதிய 6 திருத்தங்கள்..
இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைப்பு ரிசர்வ் வங்கி. இந்த வங்கி நவம்பர் 6 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கே ஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் விவரங்களில் 6 புதிய மாற்றங்களை செய்துள்ளது. இவை அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருகின்றன. பண மோசடி, பயங்கரவாத செயல்களுக்கான நிதி அளிப்பு உள்ளிட்டவற்றை தடுக்க கேஒய்சி அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கேஒய்சி என்பது வாடிக்கையாளரின் விவரங்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களாகும். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தடை சட்டத்தில் உள்ள புதிய அம்சத்தை ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இதேபோல் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் 51 பிரிவு ஏவின்படி சட்டரீதியிலான சில சரத்துகள் மாற்றப்பட்டுள்ளன. மூன்றாவதாக பழைய அறிவுறுத்தல்களை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர் ஏற்பு கொள்கை, அதிக ரிஸ்க் உள்ள கணக்குகள் தீவிர கண்காணிப்பு, தொடர்ச்சியாக கேஒய்சியை புதுப்பிப்பது, மத்திய கேஒய்சி பதிவேடு வைத்துக்கொள்வது,பிரதான வழிகாட்டலில் கேஒய்சியில் செக்சன் என்பதற்கு பதிலாக பேரகிராப் என்று மாற்றப்பட்டுள்ளது. இவை 6 அம்சங்களும்தான் ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது.