டிரம்ப்பால் 8லட்சம் கோடி லாபம்..
அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. உலகளவில் அமெரிக்க அதிபர் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிரந்தது. முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய சரியான தருணத்துக்கு காத்திருந்தனர். இந்நிலையில் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதன் எதிரொலியாக பிற்பகலில் ஆயிரத்து 25 புள்ளிகள் வரை மும்பை பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 901 புள்ளிகள் உயர்ந்து 80ஆயிரத்து378 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 270 புள்ளிகள் உயர்ந்து, 24 ஆயிரத்து 484 புள்ளிகளில் வணிகம் முடிந்தது. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 4 விழுக்காடு வரை உயர்ந்து முடிந்தன. ரியல் எஸ்டேட், ஆற்றல் உள்ளிட்ட துறை பங்குகள் 2 விழுக்காடு வரை உயர்ந்தன Bharat Electronics, Adani Enterprises, TCS, Tech Mahindra, Infosys உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. SBI Life Insurance, Titan Company, IndusInd Bank, HDFC Life மற்றும் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவன பங்குகள் சரிவை கண்டன நவம்பர் 6 ஆம் தேதி புதன்கிழமை ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் 7ஆயிரத்து 365 ரூபாயாகவும், ஒரு சவரன் 58 ஆயிரத்து 920 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி, 105 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே நகை தொடர்பாக குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.