கடன்கள் மீதான வட்டி இப்போது குறையாதா?
இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்த அளவிலேயே இருக்கும் நிலையில் வரும் பிப்ரவரி மாதம் தான் கடன்கள் மீதான வட்டியை குறைப்பது குறித்து ரிசர்வ் வங்கி யோசிக்கும் என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் அண்மையில் நடந்து முடிந்து டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் மீண்டும் அதிபரானால் பல பொருட்களின் விலைகளை உயர்த்திவிடுவார் என்ற அச்சம் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த அக்டோபரில் நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் பேசிய சக்தி காந்ததாஸ், செப்டம்பரிலும் விலைவாசி உயர்வு அதிகளவிலேயே இருப்பதாகவும், தெரிவித்தார். அமெரிக்காவில் சற்று குறைந்து வந்த பணவீக்கம், டிரம்ப் வென்றதால் மீண்டும் மாறும் வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது. சில்லறை பணவீக்க விகிதம் கடந்த செப்டம்பரில் அதிகளவில் இருந்தபோதும், 2025 நிதியாண்டின் சில்லறை பணவீக்க விகிதம் 4.5%ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஐடிஎப்சி, பாரத ஸ்டேட் வங்கிகளின் நிர்வாகிகளும், ரிசர்வ் வங்கியின் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைப்பு குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட்டில்பணவீக்கம் குறைந்த நிலையில் செப்டம்பரில் அது அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் மற்றும் காய்கனிகளின் விலை உயர்வே பணவீக்கத்துக்கான முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது. பார்கிளேஸ், மற்றும் நோமுரா நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு வரும் டிசம்பரிலேயே வரும் என்று கணித்துள்ளனர்.