வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்த கோல்ட் ஈடிஎப்
ETF வகையிலான தங்கத்தின் மீதான முதலீடுகள் கடந்த அக்டோபரில் இதுவரை இல்லாத அளவுக்கு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். ஆயிரத்து 961 கோடி ரூபாய் அளவுக்கு ஈடிஎப்வடிவிலான முதலீடுகள் குவிந்துள்ளன. இது கடந்த செப்டம்பை விடவும் மிகவும் அதிகம். 2020ஆம் ஆண்டு முதல் தங்க ஈடிஎஃப் வகையிலான முதலீடுகள் கணிசமாக உயர்ந்து வருகின்றன.
கடந்த ஜனவரி 2020 முதல் இதுவரை 24,153 கோடி ரூபாய் அளவுக்கு ஈடிஎப் வகையில் தங்கம் மீது முதலீடு பெறப்பட்டுள்ளது. ,தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதே ஈடிஎப்பில் அதிகம் பேர் முதலீடு செய்யும் பிரதான காரணமாக கூறப்படுகிறது. உலகளாவிய சமநிலையற்ற சூழல், போர்கள், பணவீக்க விகிதங்கள் உயர்வு உள்ளிட்ட காரணிகளால் தங்கத்தின் விலை ஒரே அளவாக இல்லாமல் உயர்ந்து வருகிறது. இதனால் ஈடிஎப் வகை பங்குகள் மீது அதிக முதலீடுகள் ஈர்க்கப்படுகின்றன. இது தவிர்த்து இந்தியாவில் பண்டிகை காலம் மற்றும் திருமண சீசன் என்பதாலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அமெரிக்க பெடரல் ரிசர்வ் குறைப்பதும் பெரிய தாக்கத்தை தங்கத்தின் மீது ஏற்படுத்தியுள்ளது. வட்டி விகிதம் உயரும்போது தங்கத்தின் மீதான விலை குறைப்பு தற்போது சாத்தியம் இல்லை என்றே நிபுணர்கள் கணித்துள்ளனர்.