ரிசர்வ் வங்கிக்கு அவகாசம் தேவை..

வங்கித்துறையில் கார்பரேட்கள் முதலீடு செய்ய இன்னும் ரிசர்வ் வங்கிக்கு கால அவகாசம் தேவைப்படும் என்று ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தலைவர் கே.வி. காமத் கூறியுள்ளார். வங்கிப்பணியாளர்களின் பாதுகாப்புதான் ரிசர்வ் வங்கியின் தலையாய கடமை என்று கூறியுள்ள காமத், சில நேரங்களில் கடுமையாக சிலர் நடுத்துகொள்வதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காமத்.டிஜிட்டலாக இயங்கும் நிறுவனங்களை ரிசர்வ் வங்கிதான் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். 20 விழுக்காடு வரை லாபம் வந்தால் அரசுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட தேவையில்லை என்று கூறியுள்ள அவர், அதே நேரம் சுதந்திரமாக அந்த வங்கிகளை இயங்க அனுமதிக்க வேண்டும் என்றார். அண்மையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம் தாராளமாக உள்ளதாக கூறியிருந்தார். இந்த நிலையில் அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வலுவடையும் என்றார். 2024-ல் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை 1.4%குறைந்துள்ள நிலையில் காமத்தின் இந்த கருத்து முரணாக உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றம், டாலரின் மதிப்பு உயர்வு, மோசமான வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. யாருமே எதிர்பாராத நேரத்தில் வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ராவை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் வரும் பிப்ரவரியில் நடக்க உள்ள நிதி கொள்கை குழு கூட்டத்தில் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.