அமெரிக்காவுக்கு பதில்வரி போடும் ஐரோப்பிய ஒன்றியம்..

நல்லா இருந்த உலக நாடுகளை சண்டை போட வைக்கும் அளவுக்கு ஒரு வேலையை செய்துவிட்டு தற்போது தவித்து வருகிறது அமெரிக்கா. இதற்கு முக்கிய காரணம் அண்மையில் அதிபர் டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரி விதிப்பு முறைதான். இந்தியாவுக்கு 26 விழுக்காடு , சில நாடுகளுக்கு 10 விழுக்காடு வரி விதித்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்பால் அதிருப்தி அடைந்த ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க பொருட்களில் சிலவற்றிருக்கு பதிலுக்கு பதில் வரியாக 25%அறிவித்துள்ளது. புதிய பதில் வரி வரும் மே 16 ஆம் தேதி ஒரு கட்டமாகவும், மேலும் சில பொருட்களுக்கான வரி டிசம்பர் 1 ஆம் தேதியும் அமலாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வரும் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும்முட்டை, வைரங்கள், கோழி உள்ளிட்டவையின் வரியும் உயர்கிறது. பாதாம், சோயா பீன்ஸ் உள்ளிட்ட பொருட்களின் வரி வரும் டிசம்பர் 1 ஆம் தேதி அமலாக இருக்கிறது. அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையிலான பதில் வரி குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று ஐரோப்பிய ஒன்றிய வணிக தலைவர் மார்லஸ் செஃப்கோவிக் கூறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த போர்பன் வகை மது, ஒயின், பால் பொருட்கள் இந்த பட்டியலில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது. எனினும் போர்பன் வகை விஸ்கிகளுக்கு அதிக வரி விதித்தால், ஐரோப்பிய ஒன்றிய மது வகைகளுக்கு200 விழுக்காடு வரி விதிப்பேன் என்றும் அமெரிக்கா மிரட்டியுள்ளது. அமெரிக்காவின் இந்த மிரட்டலால் ஒயின் தயாரிப்புக்கு புகழ்பெற்ற ஃபிரான்ஸ், இத்தாலி நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். ஸ்டீல் மீதான வரியை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக்கியுள்ளது. அலுமீனியத்தை இறக்குமதி செய்ய குறைந்த விலை கிடைக்குமா என்று எதிர்பார்த்துள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதியான இன்று இது தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது