சரிந்து விழுந்த அமெரிக்க பங்குச்சந்தைகள்..

அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவரான ஜெரோம் பாவெலுக்கும் இடையே நடந்து வரும் மோதலால் அமெரிக்க பங்குச்சந்தைகள் பெரியளவில் வீழ்ச்சியை கண்டுள்ளன. தங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்,பாவலை தோல்வியாளன் என்று கடுமையாக விமர்சித்தார். இதனால் அமெரிக்காவின் பங்குச்சந்தையான டவ் ஜோன்ஸ் ஆயிரத்து 70 புள்ளிகள் வரை வர்த்தக நேரத்தில் சரிந்தது. எஸ்அன்ட்பி 500 பங்குச்சந்தைகளும் 149 புள்ளிகள் குறைந்து 5,133புள்ளிகளாக இருந்தது. தொழில்நுட்பப் பங்குகளின் விலையும் கடுமையாக வீழ்ந்தன. நாஸ்டாக் பங்குச்சந்தை 504 புள்ளிகள் சரிந்து 15ஆயிரத்து 782 புள்ளிகளாக இருந்தது.
கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்காவிட்டால் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஜெரோம் பாவலை வேலையை விட்டு நீக்குவது தொடர்பாக டிரம்ப்பின் அலுவலகம் பேச்சுவார்த்தை நடத்தி சட்ட விதிகள் இருக்கிறதா என ஆராய்ந்து வருகின்றனர். எஸ்அன்ட் பி 500 பங்குச்சந்தைகளில் உள்ள 11 முக்கிய துறை பங்குகள் மொத்தமாக 7 விழுக்காடு வரை சரிந்தன.
என்விடியா நிறுவன பங்குகள் 5.6 விழுக்காடு வரை சரிந்துள்ளன. அனைத்துத்துறை பங்குகளும் சரிந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவன பங்குகள் மட்டும் 2.4விழுக்காடு உயர்ந்துள்ளன.