மாருதி கியூ4 லாபம் சரிவு..
இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின் நிகர லாபம் 1 விழுக்காடு கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் குறைந்துள்ளது. கடந்த 31 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் அந்த நிறுவனம்,25 நிதியாண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் நிகர லாபமாக 3ஆயிரத்து 952 கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி நிறுவனத்தின் மொத்த வருவாய் என்பது கடந்த காலாண்டில், 40 ஆயிரத்து 920 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 24 நிதியாண்டின் கடைசி காலாண்டில் 38 ஆயிரத்து 471 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நிதியாண்டு முழுமையாக ஒப்பிடுகையில், நிகர லாபம் என்பது ஏழரை விழுக்காடு அதிகமாகும். அதாவது 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் லாபம் கடந்த ஒரு நிதியாண்டில் லாபமாக பதிவாகியுள்ளது. 2023-24 நிதியாண்டில் இந்த தொகை வெறும் 13,488 கோடி ரூபாயாகத்தான் இருந்துள்ளது. 2025 நிதியாண்டில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனத்தின் வருவாய் என்பது 1,52,913 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த 2024 நிதியாண்டில் 1,41,858 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது
