22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
தொழில்துறை

Tata Motors அட்டகாச அறிவிப்பு..

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வணிக வாகனங்கள் பிரிவும், பயணிகள் வாகனங்கள் பிரிவும் இரண்டு தனி நிறுவனங்களாக அக்டோபர் ஒன்று முதல் பிரிக்கப்பட உள்ளன. இது பற்றி பங்கு சந்தைகளில் டாடா மோட்டர்ஸ் தாக்கல் செய்த அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (NCLT) ஒப்புதல் உட்பட பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறுவன பிரிவின் ஒரு பகுதியாக, பதிவு தேதியில் வைத்திருக்கும் ஒவ்வொரு முழுமையாக செலுத்தப்பட்ட டாடா மோட்டார்ஸ் பங்கிற்கும் பங்குதாரர்கள் புதிய வணிக வாகன நிறுவனத்தில் ஒரு பங்கைப் பெறுவார்கள். புதிய வணிக வாகன நிறுவனத்திலும் இதே போல ஒரு பங்கைப் பெறுவார்கள்.

டாடா மோட்டார்ஸின் பிரிவின் பதிவு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சட்டப்பூர்வ தாக்கல்கள் முடிந்ததும், அது பின்னர் அறிவிக்கப்படும்.

பிரிவின் ஒரு பகுதியாக, டாடா மோட்டார்ஸ் இரண்டு தனித்தனி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகப் பிரிக்கப்படும். டிஎம்எல் கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் லிமிடெட் (டிஎம்எல்சிவி) இல் உள்ள வணிக வாகன வணிகப் பிரிவு, பிரிவின் முடிவு முடிந்ததும் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் என பெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார வாகன செயல்பாடுகள் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற துணை நிறுவனங்கள் உட்பட பயணிகள் வாகன பிரிவு டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கில்ஸ் என பெயரிடப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *