22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
சர்வதேச செய்திகள்

வட்டி விகிதத்தை குறைத்தது அமெரிக்க Fed..

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 3.75% – 4% ஆக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. வேலையின்மை விகிதம் சரிந்துள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த வட்டி விகித குறைப்பை முன்னெடுத்துள்ளது.

அமெரிக்க அரசின் கடன் வரம்பை உயர்த்தும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாததால் அமெரிக்க அரசு முடங்கியுள்ளது. இது அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று கருதப்படும் நிலையில், பெடரல் ரிசர்வ் வங்கி கால் சதவீதம் அளவுக்கு வட்டியை குறைக்கும் என்று பங்கு சந்தை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த முடிவு சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருந்தது.

இந்த ஆண்டு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன, வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் இது குறைவாகவே இருந்தது.

சமீபத்திய அறிகுறிகள் இந்த முன்னேற்றங்களுடன் ஒத்துப்போகின்றன என்றும், பணவீக்கம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்த அளவில் இருந்து உயர்ந்துள்ளது என்று பெடரல் ரிசர்வ் தெரிவித்துள்ளது.

பெடரல் வங்கியின் முக்கிய கடன் விகிதத்தை 3.75 சதவீதம் முதல் 4.00 சதவீதம் வரை குறைப்பதை ஆதரித்து அதன் நிர்வாகிகள் 10 பேரும் எதிர்த்து 2 பேரும் வாக்களித்தனர் என்று அது கூறியது.

பெடரல் ரிசர்வின் ஆளுநர்களில் ஒருவரான ஸ்டீபன் மிரான் அரை சதவீத வட்டி குறைப்பை ஆதரித்தார். கன்சாஸ் நகர ஃபெட் தலைவர் ஜெஃப் ஷ்மிட் வட்டி விகிதத்தை குறைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்ததாக கூறியுள்ளது.

வேலை வாய்ப்புகள் உருவாக்கத்தில் மந்த நிலை மற்றும் இறக்குமதி வரி விதிப்புகளினால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை மட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வட்டி விகித குறைப்பை பெடரல் ரிசர்வ் முன்னெடுத்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி, பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், அதிகபட்ச வேலைவாய்ப்புகளை உறுதி செய்யவும், இரட்டை இலக்குகளை கொண்டுள்ளது. சமீபத்திய மாதங்களில் பணவீக்கம் அதன் 2% இலக்கை விட அதிகமாக இருந்தாலும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.