22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

LIC பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்.?

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) $100-150 கோடி (₹8,800-13,200 கோடி) மதிப்புள்ள பங்குகளை இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் இதற்கான ரோட் ஷோ நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக இந்த விஷயத்தை அறிந்தவர்கள் தெரிவித்தனர். இந்திய பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் கட்டளையிட்டபடி, பங்கு சந்தையில் பரிமாற்றம் செய்யப்படும் எல்.ஐ.சியின் பொது பங்குளின் விகிதத்தை 10% ஆக உயர்த்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

மே 2022ல், மத்திய அரசு எல்.ஐ,சியில் 3.5% பங்குகளை முதல்கட்ட பொதுப் பங்கு வழங்கல் (IPO) மூலம் விற்று, ₹20,557 கோடியை திரட்டியது. இது இந்தியாவின் மிகப்பெரிய பங்கு விற்பனைகளில் ஒன்றாகும். செபி விதித்துள்ள குறைந்தபட்ச பொது பங்கு வரம்பை அடைய, மே 16, 2027 க்குள், தற்போது 420 கோடி டாலருக்கு அதாவது ₹37,000 கோடிக்கு சற்று அதிகமாக மதிப்பிடப்பட்ட, 6.5% பங்குகளை விற்க வேண்டும். அரசாங்கத்திடம் தற்போது 96.5% பங்குகள் உள்ளன.

பங்கு விலை குறையாமல் இருப்பதற்கும், ஏற்கனவே உள்ள பங்குதாரர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த 6.5% பங்குகளை படிப்படியாக, பல்வேறு தவணைகளில் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு காலாண்டு முடிவதற்குள் முதல் தவணை விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 3 முதல் எல்ஐசியின் பங்கு விலை ₹949 என்ற ஐபிஓ அளவை விடக் குறைவாகவே உள்ளது. செவ்வாய் அன்று இது சற்று உயர்ந்து ₹900.7 இல் முடிவடைந்தது. இதன் சந்தை மதிப்பு ₹5.7 லட்சம் கோடியாக உள்ளது.

10% எல்.ஐ.சி பங்குகளை விற்பனை செய்ய, மே 2024 இல், மத்திய அரசு செபியிடம் மூன்று ஆண்டு நீட்டிப்பைப் பெற்றது. மே 2032க்குள் எல்,ஐ.சியின் 25% பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்று செபி கெடு விதித்துள்ளது.

செப்டம்பர் 22ல் முன்னெடுக்கப்பட்ட ஜிஎஸ்டி மறுசீரமைப்பு, தனிநபர் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரீமியங்கள் மீதான 18% வரியை ரத்து செய்தது. இதனால் காப்பீட்டு நிறுவனங்கள், இதற்கான செயல்பாட்டு செலவுகளுக்கு, உள்ளீட்டு வரி வரவுகளை கோர முடியாது.