இந்திய இன்சினியர்களுக்கு வேலை..
உலகின் மிகவும் மதிப்புமிக்க செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட் அப் நிறுவனமும், ChatGPTஐ உருவாக்கிய நிறுவனமுமான OpenAI இந்தியாவில் எஞ்சினீர்களை பணியமர்த்த தொடங்கியுள்ளது.
பெங்களூரில் நடந்த ஊடக வட்டமேசை நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத்தின் வணிக பயன்பாடுகளுக்கான தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஸ்ரீனிவாஸ் நாராயணன் மற்றும் உலகளாவிய விவகாரங்களின் இந்திய பிரிவின் தலைவர் பிரக்யா மிஸ்ரா ஆகியோர் உரையாற்றிய போது இதை தெரிவித்தனர்.
இந்தியாவில் பணியமர்த்தப்படும் எஞ்சினீர்களின் எண்ணிக்கை பற்றி அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்தியாவில் கிளை அலுவலகம் தொடங்கிய முதல் ஆண்டில் குறைந்தபட்ச அளவிலான குழுவை இங்கு வைத்திருக்கப் போவதாக அவர்கள் கூறினர்.
முதல் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஒரு அடித்தளக் குழுவை உருவாக்குவதில் நிறுவனம் கவனம் செலுத்தும் என்று பிரக்யா மிஸ்ரா கூறினார். “பின்னர், நிச்சயமாக, நாங்கள் இதை விரிவுபடுத்துவோம்”
என்று மேலும் கூறினார்.
ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியியல் பிரிவுக்கும் அதன் விற்பனைக் குழுவிற்கும் இடையே ஒரு முக்கிய அடுக்காக தீர்வுகள் வடிவமைப்பாளர் அல்லது பொறியாளர் செயல்படுகிறார். நிறுவனங்களின் தேவையைப் புரிந்து கொள்ள விற்பனைப் பிரிவுகளுடன் தீர்வுகள் வடிவமைப்பாளர்கள் கலந்தாலோசிக்கின்றனர். மேலும் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப முக்கிய பொறியியல் குழுவுடன் சேர்ந்து, தனிப்பயன்பாட்டிற்கான சாப்ட்வேர் அம்சங்களை வடிவமைக்கின்றனர்.
ஒரு AI வரிசைப்படுத்தல் மேலாளர், தீர்வுகள் வடிவமைப்பாளர் மற்றும் ஆசியா-பசிபிக், உலகளாவிய விவகாரங்களின் தலைவர் உள்ளிட்ட எட்டு பதவிகளுக்கு ஆட்களை பணியமர்த்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தனது இருப்பை அதிகரித்து, ChatGPT-யின் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொள்ள இந்நிறுவனம் முன்னெடுத்துள்ள முயற்சிளில் தீர்வு வடிவமைப்பாளர்கள் முக்கிய பங்காற்றுவார்கள்.
