இருமல் மருந்து: சைடஸ் புது திட்டம்..!!
சைடஸ் லைஃப்சைன்சஸ் (Zydus Lifesciences) நிறுவனம், முன்னணி பேக்கேஜிங் தொழில்நுட்ப நிறுவனமான SIG உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இருமல் மற்றும் சளி மருந்துகளை ஒற்றை-பயன்பாடு பைகளில் (சிப்லெட்) அறிமுகப்படுத்த உள்ளது.
இவ்வகை பேக்கேஜிங்கள் சளி மற்றும் இருமல் மருந்தை துல்லியமான அளவுகளில் வழங்குவதற்கும், சுகாதாரத்தை மேம்படுத்தவும், உற்பத்தியில் ஏற்படும் குறைபாடுகளை களையவும் உதவுகிறது.
“பயனுள்ள மருந்துகளை மேலும் அணுகக்கூடியதாகவும், நுகர்வோருக்கு ஏற்றதாகவும் மாற்றுவதே எங்களின் குறிக்கோள். நோயாளிகளை மையப்படுத்தும் அணுகுமுறைகளைத் நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். இதன் அடுத்த கட்டமாக SIG-இன் மேம்பட்ட நிரப்புதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒற்றை-பயன்பாடு ஸ்பவுட் பைகளில் Deriphyllin CoughGo ஐ அறிமுகப்படுத்துகிறோம்,” என்று சைடஸ் லைஃப்சைன்சஸின் நிர்வாக இயக்குனர் சர்வில் பி படெல் கூறினார்.
சைடஸ் லைஃப்சைன்சஸின் ‘Deriphyllin CoughGo’ க்கான புதிய பேக்கேஜிங் தீர்வு, சிப்லெட்டுகள் என்றும் அழைக்கப்படும் ஸ்பவுட் பைகளில் 5 மில்லி மற்றும் 10 மில்லி மினி-பகுதிகளில் பயன்படுத்தத் தயாராக இருக்கும் மருந்தை செயல்படுத்துகிறது
