ITC எடுத்த அதிரடி முடிவு
பல ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் கோலோச்சி வரும் பழம் பெரும் நிறுவனமான ஐடிசி, கல்கத்தா ஸ்டாக் எக்ஸ்சேஞ் (சிஎஸ்இ) எனப்படும் கல்கத்தா பங்கு சந்தையில் இருந்து தனது பங்குகளை, பதிவு நீக்கம் செய்யும் செயல்முறையை நடத்தி முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
நவம்பர் 20, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ஐடிசியின் சாதாரண பங்குகளை அதன் “அதிகாரப்பூர்வ பரிமாற்றப் பட்டியலில்” இருந்து நீக்குவதற்கு கல்கத்தா பங்குச் சந்தை ஒப்புதல் அளித்துள்ளதாக, ஐடிசி தாக்கல் செய்த ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“நிறுவனத்தின் சாதாரண பங்குகள் தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்கு சந்தை (BSE) ஆகியவற்றில் தொடர்ந்து பட்டியலிடப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்,” என்று ஐடிசி தெரிவித்துள்ளது.
கல்கத்தாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஐடிசி நிறுவனம், 1910ல் தொடங்கப்பட்டது. அன்று கல்கத்தா தான் இந்தியாவின் தலைநகர் என்பது குறிப்பிடத்தக்கது.
