அன்று டிரம்பின் நண்பன் , இன்று எதிரியா??? மஸ்க் சொல்வது என்ன???
“H-1B விசா திட்டத்தில் சில தவறான பயன்பாடுகள் இருந்ததாக நான் நினைக்கிறேன். சில அவுட்சோர்சிங் நிறுவனங்கள் H-1B விசா திட்டத்தில் திட்டமிட்டு ஏமாற்றிவிட்டன” என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் நிகில் காமத்தின் WTF பாட்காஸ்டில் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பரில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தொழில்நுட்பத் துறையில் வெளிநாட்டு தொழிலாளர்களைக் குறைக்கும் நோக்கில் H-1B விசா திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கான கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்தினார்.
H-1B விசா திட்டத்தில் டிரம்பின் கடும் எதிர்ப்பு காரணமாக, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் விசா விண்ணப்பங்களுக்கான மிக உயர்ந்த நிராகரிப்பு விகிதங்களை அனுபவித்து வருகின்றன. அதே நேரத்தில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் கிட்டத்தட்ட சாதனை அளவில் ஒப்புதல்களைப் பெறுகின்றன.
HCL அமெரிக்கா, LTI Mindtree, Cognizant மற்றும் Capgemini போன்ற நிறுவனங்கள் 2025 நிதியாண்டிற்கான தேசிய சராசரியான 2.8%-ஐ விட மிக அதிகமாக மறுப்பு விகிதங்களை எதிர்கொண்டதாக அமெரிக்க கொள்கைக்கான தேசிய அறக்கட்டளையின் (NFAP) தெரிவித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, Amazon, Microsoft, Google மற்றும் Meta போன்ற முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் 1% க்கும் குறைவான நிராகரிப்பு விகிதங்களைப் பதிவு செய்துள்ளன.
டிரம்ப் அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் அதே வேளையில் அமெரிக்க வேலைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் சமீபத்தில் தெரிவித்தார்.
சமீபத்தில், முன்மொழியப்பட்ட அமெரிக்க சர்வதேச வேலைவாய்ப்பு இடமாற்றத்தை நிறுத்துதல் (HIRE) சட்டம் H-1B விசா கட்டணங்களில் சமீபத்திய உயர்வை விட இந்தியாவிற்கு ஒரு பெரிய கவலையாக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
டீகோடருக்கு அளித்த பேட்டியில், ராஜன் கூறுகையில், HIRE சட்டம், பொருட்கள் மீது மட்டுமல்ல, அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட சேவைகளுக்கும் வரிகளை விதிக்கக்கூடும். இது இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை நேரடியாக பாதிக்கும். “எங்களின் மிகப்பெரிய கவலை பொருட்களின் மீதான இறக்குமதி வரிகள் பற்றி இல்லை. ஆனால் அவர்கள் சேவைகளுக்கு வரிகளை விதிக்கும் வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்களா என்பது பற்றி தான். இது ஒரு அச்சுறுத்தல்,” என்று அவர் கூறினார்
