22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

ITC அதிரடி திட்டம்!!!

ஐடிசி நிறுவனம் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள ஐந்து ஹோட்டல்களுடன் கூடுதலாக, மேற்கு வங்கத்தில் மூன்று புதிய ஹோட்டல்களை அமைத்து, ஹோட்டல் துறையில் அதன் இருப்பை விரிவுபடுத்தும் திட்டங்களை ஐடிசி நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் பூரி அறிவித்தார்.

பிசினஸ் & இண்டஸ்ட்ரி மாநாடு 2025-ல் பேசிய பூரி, மேற்கு வங்கத்தின் வளர்ந்து வரும் சுற்றுலாத் திறனைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், டார்ஜிலிங், குர்சியோங் மற்றும் சுந்தரவனப் பகுதிகளில் மூன்று ஹோட்டல் திட்டங்களுக்காக, ஐடிசி நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். மூலதனச் செலவு மற்றும் பிற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

தற்போது, ஐடிசி மேற்கு வங்கத்தில் ஏழு ஹோட்டல்களை இயக்கி வருகிறது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஐடிசி சோனார் மற்றும் ஐடிசி ராயல் பெங்கால் ஆகிய இரண்டு அதி சொகுசு ஹோட்டல்களும் அடங்கும்.

இது தவிர, கூட்டு முயற்சி மூலம் மேலும் ஐந்து ஹோட்டல்கள் திட்டமிடப்பட்டு வருவதாகவும், இதில் சிலிகுரிக்காகத் திட்டமிடப்பட்டுள்ள ஒரு புதிய பிராண்டின் கீழ் ஒரு அதி சொகுசு ஹோட்டலும் அடங்கும் என்றும் கூறினார்.

விவசாயம், உற்பத்தி மற்றும் சேவைகள் எனப் பல துறைகளில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், 115 ஆண்டுகளாக கொல்கத்தாவில் தனது இருப்பைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஐடிசி மேற்கு வங்கத்தில் சுமார் 100 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், மூலதனம், செழித்து வளரக்கூடிய பகுதிகளுக்குச் செல்லும் என்று குறிப்பிட்டார்.
மே.வங்கத்தில் ஐடிசிக்கு 20 உற்பத்தி மையங்கள் உள்ளன. அவற்றில் ஆறு நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்று அவர் கூறினார்.

அந்த மாநிலத்தில் உள்ள ஐடிசியின் உணவு பதப்படுத்தும் மையம் இந்தியாவில் மிகப்பெரியவற்றில் ஒன்றாகும் என்று கூறினார். 2019-ல் மூன்று உற்பத்தி பிரிவுகளுடன் இருந்த பஞ்சாலா ஆலை, தற்போது எட்டு உற்பத்தி பிரிவுகளாக விரிவடைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு திறக்கப்பட்ட ஒரு ஏ.ஐ தொழிநுடப் மையத்துடன், ஐடிசி தனது தொழில்நுட்ப இருப்பையும் வலுப்படுத்தியுள்ளது. இது கூகுளுடன் இணைந்து டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்குவதிலும், வங்காளத்தை செயற்கை நுண்ணறிவு தலைமையிலான கண்டுபிடிப்புகளுக்கான ஒரு வளர்ந்து வரும் மையமாக நிலைநிறுத்துவதிலும் செயல்படுகிறது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *