22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

₹250 கோடி முதலீடு..!!

மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனம் அதன் துணை நிறுவனமான ஆசிர்வாத் மைக்ரோ ஃபைனான்ஸில் கூடுதலாக ரூ. 250 கோடி முதலீடு செய்வதற்கு அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், புவனேஷ் தரஷங்கரை குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக (CFO) நியமித்துள்ளதாகவும் அறிவித்தது.

மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனம், பிப்ரவரி 2015-ல், சுமார் ₹ 300 கோடி சொத்து மதிப்புடன் (AUM) செயல்பட்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிர்வாத் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. கையகப்படுத்தப்பட்டதிலிருந்து, அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ. 8,189 கோடியாக உயர்ந்துள்ளது என்று நிறுவனத்தின் இணையதளம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனம், அதன் துணை நிறுவனத்தில் உள்ள பங்குளின் விகிதத்தை, ஒரு பங்குக்கு ரூ.51 என்ற விலையில், 98.31 சதவீதத்திலிருந்து 98.56 சதவீதமாக உயர்த்த உள்ளது.

இந்த வங்கி அல்லாத நிதி நிறுவனம் (NBFC) குறைந்த வருமானம் கொண்ட பெண்களுக்கு நுண்கடன் வழங்குகிறது. இதன் மூலம், வங்கிக் கணக்கு இல்லாத, சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. கூடுதலாக, இது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) கடன்கள் மற்றும் தங்கத்தின் மீதான கடன்களையும் வழங்குகிறது, இது இந்த ஆண்டு கணிசமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, புவனேஷ் தரஷங்கரை நிறுவனத்தின் குழுமத் தலைமை நிதி அதிகாரியாக நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. முன்னணி வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களில் கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால அனுபவம் கொண்ட பட்டயக் கணக்காளரான இவர், RBL வங்கி, ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, சிட்டி வங்கி ஆகியவற்றில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மூத்த பதவிகளை வகித்துள்ளார்.

நிறுவனத்தின் கடன் வரம்பை ரூ. 75,000 கோடி வரை உயர்த்துவதற்கான திட்டத்திற்கும் அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக மணப்புரம் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது. மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்குகள் கடந்த ஐந்து நாட்களில் 9 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளன. தற்போது ரூ.310ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2025-ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 64 சதவீதம் உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *