நம்ம ஊரு வண்டி..!! 50% வளர்ச்சி..!
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், டிசம்பர் 2024-ல் விற்பனையான 3,21,687 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், டிசம்பர் 2025-ல் 4,81,389 யூனிட்கள் விற்பனையாகி, 50 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
மொத்த இரு சக்கர வாகன விற்பனை, கடந்த மாதம் 4,61,071 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது டிசம்பர் 2024-ல் விற்பனையான 3,12,002 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 48 சதவீத வளர்ச்சியாகும் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு இரு சக்கர வாகன விற்பனை, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் விற்பனையான 2,15,075 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், 54 சதவீதம் அதிகரித்து 3,30,362 யூனிட்களாக உயர்ந்துள்ளது என்றும் அது மேலும் கூறியது.
மோட்டார் சைக்கிள் விற்பனை டிசம்பர் 2025இல் 2,16,867 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனையான 1,44,811 யூனிட்களிலிருந்து 50 சதவீத வளர்ச்சியாகும். ஸ்கூட்டர் விற்பனை கடந்த மாதம் 1,98,017 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது டிசம்பர் 2024-ல் விற்பனையான 1,33,919 யூனிட்களிலிருந்து 48 சதவீத வளர்ச்சியாகும்.
மின்சார வாகன விற்பனை டிசம்பர் 2024-ல் விற்பனையான 20,171 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், டிசம்பர் 2025-ல் 77 சதவீதம் அதிகரித்து 35,605 யூனிட்களாக உயர்ந்துள்ளது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிவிஎஸ் நிறுவனத்தின் சர்வதேச வணிகத்தில் நிகழ்ந்த விற்பனை டிசம்பர் 2024-ல் விற்பனையான 1,04,393 யூனிட்களிலிருந்து கடந்த மாதம் 1,46,022 யூனிட்களாக உயர்ந்து, 40 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் கூறியது.
மூன்று சக்கர வாகன விற்பனை கடந்த மாதம் 20,318 யூனிட்களாக இருந்தது. இது டிசம்பர் 2024-ல் விற்பனையான 9,685 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும் என்றும் அது மேலும் கூறியது.
