அதிர்ச்சி 25% Extra Tax??
அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பொது மக்கள் மீது ஈரான் அரசு நடத்திய துப்பாக்கி சூடுகளில் கிட்டத்தட்ட 600 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அடக்குமுறை தொடர்பாக, தெஹ்ரான் மீது அழுத்தம் கொடுக்கும் நோக்கில், ஈரானின் வர்த்தகப் பங்காளிகள் மீது அமெரிக்கா 25% இறக்குமதி வரி விதிப்பை முன்னெடுக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு எதிராக இஸ்லாமியக் குடியரசு கொடிய சக்தியைப் பயன்படுத்துகிறது என்று தனது அரசு கண்டறிந்தால், தெஹ்ரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தியுள்ளார்.
ஈரான் அந்த ‘சிவப்புக் கோட்டை’ கடக்கத் தொடங்கியுள்ளதாகத் தாம் நம்புவதாகவும், இது தன்னையும், தனது தேசியப் பாதுகாப்பு அணியையும் “மிகவும் கடுமையான மாற்று வழிகளை” பரிசீலிக்கத் தூண்டியுள்ளதாகவும் டிரம்ப் கூறுகிறார்.
இந்த வரி விதிப்புகள் “உடனடியாக அமலுக்கு வரும்” என்று திங்கட்கிழமை சமூக ஊடகப் பதிவு ஒன்றில் டிரம்ப் அறிவித்தார்.
சீனா, பிரேசில், துருக்கி மற்றும் ரஷ்யா ஆகியவை தெஹ்ரானுடன் வர்த்தகம் செய்யும் பொருளாதார நாடுகளில் அடங்கும்.
