Latest:
2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு

உள்நாட்டு செய்திகள்

இரு சக்கர வாகனத் துறை, நீண்ட கால அளவில் 8%-9% வளர்ச்சியடையும்

ஜிஎஸ்டி விகிதக் குறைப்பின் தாக்கம், உள்கட்டமைப்புக்கான அரசாங்கத்தின் மூலதன செலவுகள் மற்றும் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றின் மூலம், இரு சக்கர வாகனத் துறை நீண்ட கால அளவில் 8-9 சதவீத கூட்டு வளர்ச்சி விகிதத்தில் வளர்ச்சியடையும் என்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே.என். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி விகிதக் குறைப்பின் நன்மைகள் தொழில்துறைக்கு தொடரும் என்பதால், அடுத்த ஆண்டின் முதல் பாதியில் விற்பனை வளர்ச்சிமிகவும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
“2027 நிதியாண்டில் கூட இரு சக்கர வாகனங்களில் வலுவான வளர்ச்சியைக் காண்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

கிராமப்புற, நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களில் சாலை இணைப்பு மேம்பட்டு வரும் நிலையில், பொதுப் போக்குவரத்து துறையில் உள்ள பற்றாகுறையினால், தனி வாகனங்கள் பயன்பாடு, குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் ஆதாயமடையும் என்று கூறினார்.

மேலும், “இந்தியாவில் சுயதொழில் செய்பவர்கள் கணிசமான விகிதத்தில் உள்ளதால், அவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகங்களை பயன்படுத்தலாம்” என்றார். ஒட்டுமொத்தமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர வாய்ப்புள்ளது என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

நடப்பு நிதியாண்டில், ஜிஎஸ்டி விகிதக் குறைப்பின் பலன் இரு சக்கர வாகனங்களில் மட்டுமல்ல, நுகர்வோர் பயனடைந்த துறைகளிலும் வெளிப்படுகிறது என்று அவர் கூறினார்.

நான்காம் காலாண்டில், இரு சக்கர வாகனத் துறையின் வளர்ச்சி 15 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ”நிதியாண்டு 2025-26இல் முதல் பாதி அவ்வளவு சிறப்பாக இல்லை. இது 2 சதவீத வளர்ச்சி மட்டுமே. ஆனால் ஆண்டு முழுவதும், நீங்கள் 9 சதவீத வளர்ச்சியைக் காண்பீர்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *