Latest:
வங்கிகளுடன் சமமான போட்டித்தளத்தை வலியுறுத்தும் தங்க கடன் NBFCகள்ITCயின் தாவர அடிப்படையிலான பால் கலப்பில்லாத புரத பானங்கள் அறிமுகம்இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 700 கோடி டாலர் முதலீடு செய்யும் அமேசான்தொழில்நுட்பச் சிக்கல்களால் அமெரிக்க வங்கிகளில் சேவைகள் பாதிப்பு.LPG சிலிண்டர் ஒன்றுக்கு ₹325-க்கும் மேல் மானியம் வழங்கும் அரசாங்கம்இந்தியாவில் 12.29 சதவீதத்தை எட்டிய மொத்த விற்பனை விலை பணவீக்கம்தங்கம் விலை முந்தைய உச்ச நிலையை அடைய 2 வருடங்கள் ஆகும் - கோல்ட்மேன் சாக்ஸ்Priced Out or Passing It On? India's FMCG Sector Faces an Inflation Testபணவீக்கத்தால் தாக்கப்படும் இந்தியாவின் FMCG துறைஹால்மார்க் தங்க நகைகள் மீதான பிஐஎஸ் கண்காணிப்பில் குறைபாடுகள்வங்கிகளுடன் சமமான போட்டித்தளத்தை வலியுறுத்தும் தங்க கடன் NBFCகள்ITCயின் தாவர அடிப்படையிலான பால் கலப்பில்லாத புரத பானங்கள் அறிமுகம்இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 700 கோடி டாலர் முதலீடு செய்யும் அமேசான்தொழில்நுட்பச் சிக்கல்களால் அமெரிக்க வங்கிகளில் சேவைகள் பாதிப்பு.LPG சிலிண்டர் ஒன்றுக்கு ₹325-க்கும் மேல் மானியம் வழங்கும் அரசாங்கம்இந்தியாவில் 12.29 சதவீதத்தை எட்டிய மொத்த விற்பனை விலை பணவீக்கம்தங்கம் விலை முந்தைய உச்ச நிலையை அடைய 2 வருடங்கள் ஆகும் - கோல்ட்மேன் சாக்ஸ்Priced Out or Passing It On? India's FMCG Sector Faces an Inflation Testபணவீக்கத்தால் தாக்கப்படும் இந்தியாவின் FMCG துறைஹால்மார்க் தங்க நகைகள் மீதான பிஐஎஸ் கண்காணிப்பில் குறைபாடுகள்

உள்நாட்டு செய்திகள்

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 700 கோடி டாலர் முதலீடு செய்யும் அமேசான்

அமெரிக்க தொழில்நுட்ப மற்றும் மின்-வணிக நிறுவனமான அமேசான், அதன் தூய்மையான எரிசக்தித் திட்டங்களை விரிவுபடுத்தும் நோக்கில், 2030-க்குள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் 700 கோடி டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த முதலீட்டுடன் சேர்த்து, 2030-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் அமேசான் மேற்கொள்ளும் மொத்த முதலீட்டு உறுதிப்பாடு 5,500 கோடி டாலராக உயர்கிறது. இதில், செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் உள்கட்டமைப்புக்காக ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட 1,300 கோடி டாலர் முதலீடும், பல்வேறு வணிக நடவடிக்கைகளுக்காக முன்னதாக அறிவிக்கப்பட்ட 3,500 கோடி டாலர் முதலீடும் அடங்கும்.

இந்நிறுவனம் ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2010 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் அமேசானின் ஒட்டுமொத்த முதலீடு 8,800 கோடி டாலரை எட்டும்.

ஏற்கனவே இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்காக 400 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களைச் செய்துள்ள அமேசான், தற்போது கூடுதலாக இந்த முதலீட்டை அறிவித்துள்ளது. இதன் மூலம், கார்பன் வெளியேற்றம் இல்லாத மின்சாரத்தை வாங்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் திகழ்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனம், மொத்தம் 934 மெகாவாட் திறன் கொண்ட நான்கு புதிய காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் திட்டங்களை அறிவித்துள்ளது.

இதில் கர்நாடகாவில் 234 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் திட்டம் (இது ஆசியாவில் அமேசான் மேற்கொள்ளும் மிகப்பெரிய திட்டமாகும்), அதேபோல் கர்நாடகாவில் 200 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மற்றும் சூரியசக்தி கலப்புத் திட்டம், மத்தியப் பிரதேசத்தில் 300 மெகாவாட் சூரியசக்தி திட்டம் மற்றும் ராஜஸ்தானில் 200 மெகாவாட் சூரியசக்தி திட்டம் ஆகியவை அடங்கும்.

இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, இவற்றின் மொத்த மின் உற்பத்தித் திறன் 2 ஜிகாவாட்டுக்கும் அதிகமாக இருக்கும். இவை மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது போன்ற முதலீடுகள் இந்தியாவின் தூய்மையான எரிசக்தி இலக்குகளை அடைவதற்கும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் முக்கியப் பங்காற்றுகின்றன என்று மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *