Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

உள்நாட்டு செய்திகள்

ரூ.22,000 கோடி நஷ்டத்தில் தடுமாறும் ஏர் இந்தியா

ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனம், எதிர்பார்த்ததை விட அதிகமாக ரூ.22,000 கோடிக்கும் (2,400 கோடி டாலர்) அதிகமான வருடாந்திர இழப்பைச் சந்தித்துள்ளது. இதனால், அந்நிறுவனம் அதன் பங்குதாரர்களிடமிருந்து நிதி உதவியை நாடியுள்ளது என நிலைமை அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

போயிங் நிறுவனத்தின் 787 டிரீம்லைனர் விமானத்தின் கோரமான விபத்து, இந்திய விமான நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டது, மற்றும் மத்திய கிழக்கு மோதல் போன்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏர் இந்தியாவிற்கு, மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், 1,600 கோடி டாலர் இழப்பு ஏற்படும் அந்நிறுவனம் கணித்திருந்தாக புளூம்பெர்க் நியூஸ் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், இழப்பு இதை விட வெகுவாக அதிகரித்துள்ளது.

ஏர் இந்தியாவின் பெரும் பங்குதாரரான டாடா குழுமமும், அந்நிறுவனத்தில் 25.1% பங்குகளை வைத்திருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட்டும், இந்நிறுவனத்திற்கு தேவைப்படும் பணத்தை முதலீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிதி முதலீட்டின் அளவு இன்னும் விவாதிக்கப்பட்டு வருகிறது, ஆனால் அது நிறுவனத்திற்குத் தேவையானதை விட குறைவாக இருக்கலாம். இதன் பொருள், ஏர் இந்தியா மற்ற நிதி ஆதாரங்களைத் தேட வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏர் இந்தியாவிற்கு ஒரு முக்கியமான காலகட்டத்தில் இந்த வரலாறு காணாத இழப்பு ஏற்பட்டுள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன், இந்த ஆண்டின் பிற்பகுதியில் பதவி விலகும் தனது எண்ணத்தை கடந்த வாரம் அறிவித்தார். விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் சமீபத்திய வருடாந்திர தணிக்கையில், பாதுகாப்புப் பிரச்சினைகளில் இந்த விமான நிறுவனம் மிக மோசமான இடத்தைப் பிடித்தது. மேலும், விரிவாக்கத் திட்டங்கள் இருந்தபோதிலும், வருவாயை உயர்த்துவதிலும், சேவையை விரும்பிய நிலைக்கு மேம்படுத்துவதிலும் அது சிரமப்பட்டு வருகிறது.

டாடா குழுமத் தலைவர் நடராஜன் சந்திரசேகரனுக்கு மூன்றாவது பதவிக்காலத்தை அங்கீகரிப்பதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக இந்த இழப்புகளைக் கட்டுப்படுத்துவதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ப்ளூம்பெர்க் நியூஸ் பிப்ரவரியில் செய்தி வெளியிட்டது.
பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமான நிறுவனங்களுக்கு மூடியதால், இந்திய விமான நிறுவனங்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு நீண்ட வழித்தடங்களில் பயணிக்க வேண்டியதாகியது. ஜூன் மாதம் 240-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த போயிங் டிரீம்லைனர் விமான விபத்து, அந்த விமான நிறுவனத்தை நிலைகுலையச் செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *